ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற 765 கிலோ வாட் மின்சார தட துவக்கவிழா நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டு திட்டத்தை துவக்கிவைத்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் மோடி பேசியதாவது: பாஜகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலமாக ஜார்கண்ட் மாநிலம் வளர்ச்சிபாதையை தேர்ந்தெடுத்துள்ளது. இதற்காக வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். குஜராத் மாநிலத்தை முந்திசெல்ல தேவையான அனைத்து தகுதியும் ஜார்கண்ட் மாநிலத்துக்கு உள்ளது.

ஆனால் சட்டமன்ற தேர்தல்களில் பெரும்பான்மை அரசை தேர்ந்தெடுக்காததாலேயே ஜார்கண்ட் இன்னும் பின் தங்கியிருக்கிறது.

மத்தியில் பாஜக தலைமையில் பெரும்பான்மை அரசு அமைந்துள்ளது. இதன் காரணமாகவே, பல முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்திருக்கிறது. பெரும்பான்மை ஆட்சி இல்லாவிட்டால் கூட்டணிக் கட்சிகளால் நெருக்கடியை சந்தித்திருக்க வேண்டும். எனவே, பெரும்பான்மை ஆட்சியை நீங்கள் தேர்வு செய்யுங்கள்

தற்போது ஜார்கண்ட் மாநிலம் இருக்கும் நிலையை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இதை வளர்ச்சிபாதைக்கு கொண்டுவந்தே தீருவோம். அடல் பிகாரி வாஜ்பாய் உருவாக்கிய மாநிலத்தை பாஜக கைவிடாது. இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டுமானால், நாட்டின் எந்த ஒரு பகுதியையும் கைவிடமுடியாது. அனைத்து மாநில வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தரும் . அதன்மூலமாகவே நாட்டை வளர்க்கமுடியும்.

அரசு எப்படி பணியாற்றுகிறது என்பதை செல்போனை வைத்துக்கொண்டு சாமானியர்களும் கண்டுபிடிக்க வசதி செய்துதரப்படும். அந்த நிலையைத் தான் டிஜிட்டல் இந்தியா என்று கூறிவருகிறோம்.

Tags:

Leave a Reply