பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க முடிவுசெய்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில முதல்வர்கள், “அரசியல் சாசனத்தை மீறியசெயல்களில் ஈடுபட வேண்டாம்’ என்று பாஜக அறிவுறுத்தியது.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் ஷா நவாஸ் ஹுசைன் கூறுகையில், “தேர்தலை எதிர்நோக்கியுள்ள காங்கிரஸ் முதல்வர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை இருப்பதாகத் தெரிகிறது. அதன் காரணமாக அரசியல் சாசனத்தை மீறியசெயல்களில் ஈடுபடாமல் அவர்கள் தங்களை பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடிக்கு மக்களிடையே கிடைத்துள்ள பிரபலத்தை கண்டு அவர்கள் அத்தகைய தாழ்வு மனப்பான்மையில் விழக் கூடாது’ என்றார்.

Tags:

Leave a Reply