நாக்பூரில் மெட்ரோ ரெயில் திட்டபணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மராட்டியத்தின் நாக்பூர் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோரெயில் போக்குவரத்தை தொடங்க மத்திய, மாநில அரசுகள் முடிவுசெய்தன. நாக்பூரில் ரூ.8 ஆயிரத்து 680 கோடி மதிப்பீட்டில் மெட்ரோரெயில் திட்டத்தை நிறைவேற்ற நேற்று முன்தினம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து இந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நாக்பூரில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

இந்த திட்டத்தின்படி நாக்பூரில் இருவழித்தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. வட– தெற்கில் 19.65 கி.மீ., வழித்தடமும், கிழக்குமேற்கில் 18.55 கிலோ மீட்டர் வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது.

இந்த மெட்ரோரெயில் பணிகள் தொடங்கப்பட்டு, 2018–ம் ஆண்டில் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Tags:

Leave a Reply