ஹரியாணாவில் ஆளும் காங்கிரஸ்லிருந்து விலகி மற்றொரு முன்னாள் எம்.பி.யான ஜிதேந்திரசிங் மாலிக், பாஜகவில் இணைந்தார்.

ரோதக் மாவட்டத்தில் பாஜக சார்பில் சனிக் கிழமை நடைபெற்ற விழாவில், பாஜக மாநில முன்னாள் தலைவர் கணேஷ்லால் உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.

அப்போது அவர்களின் முன்னிலையில் ஜிதேந்திரசிங் மாலிக் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.

அதன் பிறகு செய்தியாளர் களிடம் மாலிக் கூறுகையில், "காங்கிரஸிலிருந்து முக்கிய தலைவர்கள் பலர் விலகி பா.ஜ.க.,வில் இணைவது குறித்தும், தனக்கு எதிராக போர்க் கொடி தூக்குவது குறித்தும் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்லும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியால் செயல்படுத்தப் பட்டு வரும் திட்டங்களால் ஈர்க்கப்பட்டே நான் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளேன்' என்றார்.

ஹரியாணா மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவிரும்பாத மாலிக், அங்கு விரைவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட ஆர்வம்காட்டி வருகிறார்.

முன்னதாக இதே மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வீரேந்தர் சிங், தனது ஆதரவாளர்களுடன் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத் தக்கது

Tags:

Leave a Reply