பிரதமர் நரேந்திர மோடிக்கு புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மனையில் இன்று வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது .

63 வயதாகும் பிரதமர் இன்று காலை 7 மணிக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். இசிஜி, உள்ளிட்ட பல முக்கிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 6 மணி நேரம் வரை அங்கு மோடி இருந்தார். மோடி மருத்துவ பரிசோதனை முடிந்து திரும்பும்வரை அந்த இடமே கோட்டைபோல மாறிவிட்டது. அந்த அளவுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மோடிக்கு இது போன்று 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். மோடியின் வருகை மருத்துவ மனையின் அன்றாட அலுவல்களை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் இருந்தது

Leave a Reply