தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 63வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். விஜயகாந்தை பிரதமர் மோடி தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில

அமைப்பு பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு, மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர் .

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு போட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பிரதமர் மோடி சார்பிலும், பாஜக சார்பிலும், என் சார்பிலும் தேமுதிக. தலைவர் விஜய காந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன்.

கேள்வி:– உங்கள் கூட்டணி எப்படி இருக்கிறது?

பதில்:– தே.ஜ., கூட்டணி வலுவான கூட்டணி. பலமான கூட்டணி.

கே:– சட்ட சபை தேர்தலில் உங்கள் கூட்டணி தொடருமா?

ப:– எங்கள் கூட்டணி வலுவானது என்று சொல்லிவிட்டேன். எனவே இந்த கேள்விக்கு இடமே இல்லை. கூட்டணி தொடரும்.

என்று பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்

Leave a Reply