தன் மகன் மீதான புகார்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பிரதமர் அலுவலகம் சார்பில் புதன்கிழமை கடுமையான மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களாகவே சில ஆங்கில நாளிதழ்களில் ராஜ்நாத்தின் மகன் பங்கஜ் சிங் பற்றி பல்வேறு வகையான அவதூறு புகார்களை வெளியிட்டு வருகின்றன . அதில், தம் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி காவல்துறை அதிகாரிகளை பணி அமர்த்தல், இடமாற்றம் உட்பட பல அரசு வேலைகளுக்காக பங்கஜ்சிங் பணம் பெறுவதாகவும், இதற்காக அவரை நேரில் அழைத்து மோடி கண்டித்ததாகவும் அவதூறுகளை பரப்பின .

இந்நிலையில் இதை கடுமையாக கண்டித்து மறுப்பு தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங் , 'கடந்த 15, 20 நாட்களாக என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் ஆதாரமற்ற பல புகார்கள் வெளியாகி வருகின்றன.

இவற்றில் ஒன்றாவது நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலகத்தயாராக இருக்கிறேன். இது குறித்து பிரதமர் மற்றும் பாஜக தலைவர் அமித்ஷாவிடம் எனது ஊகத்தை வெளிப்படுத்திய போது அவர்கள் அதிர்ச்சியுடன் நம்ப மறுத்தனர்.'

இந்த விஷயத்தில் தாம் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் (ஆர்.எஸ்.எஸ்) தலைவர்களை சந்திக்கவில்லை என மறுத்த ராஜ்நாத், இந்தப்புகார்களை கிளப்புவது யார் எனவும் சொல்ல மறுத்துவிட்டார்.

இந்நிலையில் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் அலுவலகம் கூறும்போது, 'தூண்டும் நோக்கம் கொண்ட இந்த செய்திகள் வெறும் பொய்யானவை மற்றும் அரசு மீதான செல்வாக்கிற்கு களங்கம் சுமத்தி, பெயரைக் கெடுக்கும் முயற்சி. இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுபவர்கள் நாட்டின் நலனுக்கு கேடு விளைவிப்பவர்கள்.' என ராஜ்நாத்திற்கு ஆதரவாகக் குறிப்பிட்டுள்ளது.

Tags:

Leave a Reply