·மத்திய அமைச்சர்களுக்கு ஆட்சி உரிமையை பிரதமர் நரேந்திரமோடி, பகிர்ந்து அளித்திருப்பதாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்திருக்கிறார். பெரும்பாலான மக்கள் கருதுவதற்கு முற்றிலும் மாறாக பிரதமர் இவ்வாறு செய்திருப்பதாக அவர் கூறினார்.

இதனால் பல்வேறு பிரச்னைகளுக்கு பதில்சொல்லும் கடமை அமைச்சர்களுக்கு இருப்பதாகவும் தெளிவான பாதையில் மோடியின் அரசு செல்வதாக கூறிய அவர், ஜனநாயக காரணங் களுக்காக சற்று நிதானமாக செயல்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். இல்லை யெனில், மத்திய அரசு விரைவாக செயல்படும் என ஜெட்லி கூறியுள்ளார்.

நரேந்திர மோடியின் ஆற்றல் காரணமாகவே, அனைவருக்கும் வங்கிக்கணக்கும் திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே 2கோடி கணக்குகள் தொடங்கப் பட்டிருப்பதாக அருண்ஜெட்லி கூறியிருக்கிறார். தற்போதைய ஆட்சியில் பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் இரவு 9 மணி வரைகூட பணியாற்றுவதாக தெரிவித்தார்.

Tags:

Leave a Reply