ஆசிரியர் தின நாளில் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதமர் நரேந்திரமோடியின் உரையை கேட்க வேண்டும் என்று நாடுமுழுவதும் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தினத்தின் பெயரை இனிமேல் சமஸ்கிருத மொழியில் குரு உத்சவ்-2014 என்று அழைக்கப்பட வேண்டுமென மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் இருந்து நாட்டின் பல பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிகாட்சி மூலம் உரையாட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

அந்த உரையாடலை அனைத்து சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் கட்டாயம் கேட்கவேண்டும் என்றும், அனைத்து சி.பி.எஸ்.சி பள்ளிகளிலும் ஒளிப்பரப்பு சாதனங்கள், டி.டி.எச் சாட்டிலைட், மின்சாரம், மின்வெட்டு ஏற்பட்டால் அதை தவிர்க்க ஜெனரேட்டர் என அனைத்தும் தயார்நிலையில் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், திரையிடுவதற்கான சாதனங்கள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் கட்டாயம் வானொலிமூலம் உரையை கேட்க, பள்ளி நிர்வாகங்கள் ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு என்னென்ன வகையிலான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன எத்தனை மாணவர்கள், ஆசிரியர்கள் பங்ககேற்க உள்ளனர். என்ற முழுவிவரங்களையும், சி.பி.எஸ்.சி இயக்குனரகத்திற்கு செம்டம்பர் 1-ம்தேதி மாலை 5 மணிக்குள் ஒவ்வொருபள்ளி நிர்வாகமும் தெரிவிக்கவேண்டும் என்றும், ஆசிரியர் தின நாளில் சி.பி.எஸ்.சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பிரதமர் நரேந்திரமோடியின் உரையை கேட்கவேண்டும் என்றும் நாடுமுழுவதும் உள்ள சி.பி.எஸ்.சி பள்ளிகளுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply