ஜப்பானில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் மோடி டோக்கியோவில் உள்ள டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் தொழில்நுட்பம் மற்றும் கலாசார அகாடமி தொடக்கவிழாவில் கலந்து கொண்டார்.

அந்தவிழாவில் ஜப்பானை சேர்ந்த வர்த்தகர்கள் ஏராள மானவர்கள் பங்கேற்றனர். விழாவில் நரேந்திர மோடி மிகவும் உற்சாகமாகவும், குதூகல மாகவும் காணப்பட்டார்.

விழாவில் ஜப்பானின் பாரம்பரிய 'டெய்கோ டிரம்ஸ்' இசைநிகழ்ச்சி நடந்தது. அதில் ஒரு ஆண் மற்றும் ஒருபெண் டிரம்ஸ் கலைஞர்கள் பங்கேற்றனர். அவர்கள் வாசித்து முடித்ததும் பிரதமர் மோடியை டி.சி.எஸ். நிறுவன தலைமை செயல் அதிகாரி டிரம்ஸ் வாசிக்க அழைத்தார்.

உற்சாகமாக சென்ற மோடி மிகவேகமாக டிரம்ஸ் வாசித்தார். அப்போது அவர்கள் கொடுத்த குறிப்புகளை பார்க்காமல் சொந்தமாகவே வாசித்தார். அவருடன் ஆண் கலைஞரும் சேர்ந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சி வீடியோ கான்பரன்சிங் மூலமும் நேரடியாக ஒளி பரப்பப்பட்டன. 'டிரம்ஸ்' வாசித்து முடித்தபின் அவரை அங்கு கூடியிருந்த வர்த்தகர்களும், பார்வையாளர்களும் கைதட்டி பாராட்டினர்.

Tags:

Leave a Reply