தமிழக மீனவர்கள் குறித்து சுப்பிரமணியசாமி தெரிவித்த கருத்துக்கும், பாஜக.,வுக்கும் எந்ததொடர்பும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார் .

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்டகேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-இலங்கையிடம், தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடியுங்கள் என்று தான் சொல்லியதாக சுப்பிரமணிய சாமி கூறியிருக்கிறாரே? இதை பாஜக கருத்தாக ஏற்றுக்கொள்ளலாமா?

பதில்:-சுப்பிரமணிய சாமியின் இந்தகருத்துக்கும், பாரதீய ஜனதாவுக்கும் எந்ததொடர்பும் இல்லை. மீனவர்கள் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு தமிழக பாரதீய ஜனதா பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நான் உள்பட அனைத்து தலைவர்களும் இதற்காக பெரும் முயற்சி மேற்கொண்டு இருக்கிறோம்.

கேள்வி:-பா.ஜனதாவின் கருத்து இல்லை என்கிறீர்கள். அப்போது இதுகுறித்து மேலிடத்தில் புகார் செய்துள்ளீர்களா?

பதில்:-இதுகுறித்து கட்சியின் அகில இந்திய தலைமையிடம் தெரியப்படுத்தி யிருக்கிறோம். அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்வார்கள். இந்தநேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இதை நீங்கள் அரசியல் ஆக்கவேண்டாம்.

Leave a Reply