நரேந்திர மோடி தலைமையிலான அரசு தனது 100 நாள்களை செவ்வாய்க் கிழமை நிறைவு செய்தது. அதை முன்னிட்டு, தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இனிப்புகளை வழங்கினார். பாஜக அலுவலகம் முன்பு தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கைத் தமிழர்கள், தமிழக மீனவர்கள் நலனில் பாஜகவும் மத்திய அரசும் அக்கறை கொண்டுள்ளது. மோடி அரசின் நடவடிக்கையால் இலங்கைசிறையில் உள்ள மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையால் கைப்பற்ற தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் தமிழகமீனவர்கள் தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி சர்ச்சைக்குரிய முறையில் கருத்துதெரிவித்து வருவது வருத்தமளிக்கிறது.

சுவாமியின் கருத்து பாஜகவின் கருத்தல்ல. இதுகுறித்து பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பொதுச் செயலாளர் முரளிதர ராவ், இணை அமைப்புப் பொதுச்செயலாளர் வி. சதீஷ் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார்.

Leave a Reply