பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயனத்தின் மூலமாக தெற்காசியாவில் புதியசகாப்தம் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் பாராட்டியுள்ளன. பிரதமர் நரேந்திரமோடி 5 நாள் பயணமாக ஜப்பானுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அவரது ஜப்பான் பயணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் கூறியிருப்பதாவது;

2-ம் உலக போருக்குபின்னர் முதல் முறையாக இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்களை வழங்குவதற்கும் ஜப்பான் முன்வந்துள்ளது.

இந்த பயணம் குறித்து டெய்லி மெய்ல் ஊடகம் எழுதியிருப்பதாவது: தென்னாசிய பிராந்தியத்தில் சர்வதேச உறவுகளில் ஒருபுதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இரு நாடுகளும் நீண்ட காலம் எதிர் கொண்டிருக்கும் சவால்களையும் பிராந்திய பாதுகாப்பையும் இரு நாடுகளும் இணைந்து எதிர் கொள்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது

ப்ளூம்பெர்க் ஊடகம் எழுதியுள்ளதாவது: குஜராத் கலவரத்துக்கு பிறகு அமெரிக்கா, மோடிக்கு விசாவழங்க மறுத்து வந்தது. இங்கிலாந்தும் கூட குஜராத்முதல்வராக இருந்த மோடியை சந்திக்காமல் இருந்துவந்தது. தற்போது மோடியின் ஜப்பான்பயணம் என்பது 'கிழக்கு நாடுகளை' நோக்கிய நட்புக்கரமாக கருதப்படுகிறது.

குவார்ட்ஸ் ஊடகம் எழுதியிருப்பதாவது: சீனா ஜப்பான் உறவு சீர்குலைந்த நிலையில் இந்தியா வுடனான நல்லுறவு ஜப்பானுக்கு சாதகமானது. இருப்பினும் புவிசார் அரசியல்நலன்கள் என்பது மோடியின் பயணத்தின் நோக்கமாக இல்லை புவிசார்வர்த்தகம் மற்றும் முதலீடு என்பது தான் மோடியின் பயணத்தின் இலக்காக இருந்தது.

வால்ஸ்ட்ரீட் ஜேர்னல்: இந்தியாவை பொருளாதாரத்தில் வலுவாக கட்டமைக்கவேண்டிய நெருக்கடியில் இருக்கும் மோடி வலுவான நல்லுறவை ஜப்பான் பிரதமருடன் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார். மோடியின் 5நாள் பயணத்தின் மூலமாக ஜப்பான் முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளது.

Leave a Reply