நாடாளும ன்றத்தில் தூங்கிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியை குறை கூறுவது எந்தவகையில் நியாயம் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. அமேதியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, நாட்டுமக்களின் பிரச்னைகளை கண்டுகொள்ளாமல் ஜப்பானில் பிரதமர் மோடி ட்ரம்ஸ் இசைத்ததாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடிகொடுத்துள்ள பாஜக, முந்தைய காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகளால் தான், பல்வேறு பிரச்னைகள் உருவாக காரணம். விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்களின் பிரச்னைகளை போக்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

மக்கள் பிரச்னைகளை எழுப்பவேண்டிய நாடாளுமன்றத்தில் உறங்கிய ராகுல் காந்தி, பிரதமரை விமர்சிப்பது நகைப்புக் குரியதாக இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply