இந்திய பிரதமர் வானொலி மூலமாக மக்களின் கருத்துக் களையும், குறைகளையும் கேட்டறிய திட்டமிட்டு ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சமூக வலைத் தளம், மின்னஞ்சல், காணொலி மூலம் மக்களை தொடர்பு கொண்டு வரும் நரேந்திர மோடி விரைவில் வானொலி மூலம் மக்களின் கருத்துக்களையும், குறைகளையும் கேட்டறிய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கான செயல் பாட்டு திட்டத்தையும், சத்தியக் கூறுகள் குறித்து ஆலோசனைகள் வழங்க மக்கள் கேட்டுகொள்ளப் பட்டுள்ளனர்.

இந்த புதியதிட்டம் பிரதமர் அலுவலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வானொலி வாயிலாக மக்களிடம் மோடி நடத்தும் கலந்துரையாடல் எந்தவடிவில் இருக்க வேண்டும்? அவரிடம் எந்தெந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம்? என்று கேட்கப்பட்டுள்ளது. அந்த வானொலிசந்திப்பு வாரம் ஒருமுறையா? அல்லது மாதம் ஒரு முறையா?, எவ்விதம் இருக்கவேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது.

முன்கூட்டியே அழைத்தவர்களுடன் மட்டும் அவர் கலந்துரையாட வேண்டுமா? அல்லது நேரடியாக தொலை பேசியில் உரையாடலாமா? என்பது பற்றிய ஆலோசனைகளை வழங்குமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply