பாகிஸ்தானில் ஒருவாரமாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த கன மழைக்கு 170 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஜீலம் மாவட்டத்தில் கூரைகளின் மேல் தஞ்சம் அடைந்திருந்த பல்வேறு மக்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப் பட்டனர். இதற்கிடையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹாஃபி சாபாத் நகரம் முற்றிலும் நீரில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநில அரசு அவசர நிலை யை பிரகடனப் படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானில் வெள்ளம்பாதித்த பகுதிகளுக்கு நிவாரண உதவி வழங்க தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு நேற்று கடிதம் எழுதினார்.

Leave a Reply