நாட்டுமக்களின் நலன், நாட்டின் நலனே மோடி அரசின் கொள்கையாக உள்ளது. நீண்டகாலத்துக்கு பிறகு சிறந்த வெளியுறவு கொள்கையைகொண்ட அரசு மத்தியில் அமைந்துள்ளது என்று பாஜ தலைவர் அமீத் ஷா பேசியுள்ளார் .

கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி பேரணியில் அவர் பேசியதாவது: தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் உள்ளிட்ட அண்டைநாட்டு தலைவர்களை அழைத்து புதியதொடக்கத்தை ஏற்படுத்தினார் மோடி. பாகிஸ்தானுடன் வெளியுறவு செயலர்கள் நிலையில் பேச்சு வார்த்தை என்று நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினார். ஆனால், காஷ்மீர் பிரிவினை வாதிகளுடன் பாகிஸ்தான் தூதர்பேசியதால், பேச்சுவார்த்தையை ரத்துசெய்தார். இதன் மூலம் நமது எல்லையை பாதுகாப்பது, நாட்டின் நலனேமுக்கியம் என்பதை மோடி உணர்த்தியுள்ளார்.

நீண்ட காலத்துக்குப்பிறகு, சிறந்த வெளியுறவு கொள்கையை கொண்ட அரசு மத்தியில் தற்போது அமைந்துள்ளது. அனைத்துமக்களின் தேவைகளை புரிந்துகொண்டு செயல்படும் அரசு, 100 நாட்களில் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. விலை வாசியை குறைத்தது, கருப்புபணத்தை கொண்டு வர முயற்சி என பல்வேறு நடவடிக்கைகள் இந்த 100 நாள்களில் செய்யப்பட்டுள்ளது. நமதுவாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவருவார் என்று மக்கள் கூறும் தலைவராக மோடி உள்ளார் என்றார் அமீத் ஷா.

Leave a Reply