சாரதா சிட்பண்ட் மோசடியில் திரிணாமுல் பிரமுகர்களுக்கு தொடர்புள்ளதால், தார்மிக பொறுப்பு ஏற்று மம்தா பதவி விலக வேண்டும் என்று அமித்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.

சாரதா சிட்பண்ட் மோசடிவழக்கில் முதல்வர் மம்தாவுக்கு நெருக்கமான திரிணாமுல் கட்சி பிரமுகர்கள் மீது விசாரணை தொடங்கி உள்ளது. மம்தா ரயில்வே அமைச்சராக இருந்தகாலத்தில், சாரதா நிறுவனமும், ரயில்வேயின் ஐஆர்சிடிசியும் மேற்கொண்ட கான்டிராக்டில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய அரசு குற்றம் சுமத்தி வருகிறது. இந்தமோசடி குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் வரும் 13ம் தேதியன்று, 2 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பாஜக தலைவர் அமித்ஷா வந்திருந்தார்.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசும் போது, 'மக்களின் பணத்தை சுருட்டிய சாரதா சிட்பண்ட் மோசடியில் மம்தாவுக்கு நெருக்க மானவர்களுக்கு தொடர்புள்ளது. இதில் குற்றம்செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சிறையில் தள்ளுவோம். அதேபோல், அரசியலில் மம்தாசெலுத்தும் கவனத்தை மக்கள்பணியில் செலுத்தினால் மேற்குவங்கம் முன்னேறியிருக்கும்' என்றார். மேலும், மம்தா பதவி விலகவும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply