சுவாமி விவேகானந்தரின் சகோதரத்துவ கருத்துகளை பின்பற்றி யிருந்தால், அமெரிக்க இரட்டைக்கோபுரங்கள் தாக்குதல் போன்ற கோழைத் தனத்தை வரலாறு கண்டிருக்காது' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

டில்லியில் நடந்த விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

சுவாமி விவேகானந்தரின், உலகளாவிய சகோதரத்துவம் என்றசெய்தி, பின்பற்றப்பட்டிருந்தால், அமெரிக்காவில் இரட்டைகோபுர கட்டடங்கள் தகர்க்கப்பட்டது போன்ற, மோசமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்காது,

கடந்த, 1893 செப்டம்பர், 11ல், சிகாகோ நகரில் நடைபெற்றமாநாட்டில், விவேகானந்தர் நிகழ்த்தியது, அவரின் ஆன்மாவிலிருந்து உருவான உணர்ச்சிமிக்க உரை. செப்டம்பர், 11ல், அமெரிக்காவில், இரண்டுமுக்கிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஒன்று, 1893ல், விவேகானந்தர் நிகழ்த்திய உரை. மற்றொன்று, 2001ல், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டைகோபுரங்கள் தகர்க்கப்பட்டது. இரண்டில், ஒன்று அழிவை பிரதிபலிக்கிறது.

விவேகானந்தர் தன்பேச்சின் மூலம், ஒட்டுமொத்த உலகின் கவனத்தை ஈர்த்ததோடு, நம் நாட்டின் உயரிய வரலாறு மற்றும் கலாசாரத்தையும் எடுத்துரைத்தார். அத்துடன் அவரின்பேச்சு, உலக நாடுகள் எங்கும் எதிரொலித்தது. அதனால், விவேகானந்தரை நினைவு கூரும் இந்த நாளில், அவரின் ஒற்றுமை, சகோதரத்துவம், அமைதி என்ற வார்த்தைகளையும் கவனத்தில்கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்..

Leave a Reply