நுகர்வோர் தங்களது குறைகளை முறையி டுவதற்கு வசதியாக புதிதாக ஒரு இணைய தளம் ஏற்படுத்தப்பட்டு வருவதாக பஸ்வான் தெரிவிததுள்ளார் . இதுகுறித்து, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறுகையில், நுகர்வோர் தங்களுக்கு

ஏற்படும்குறைகளை தெரிவித்து முறையிடுவதற்காக தனியாக ஒரு இணைய தளம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நுகர்வோர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அதற்குரிய சட்டங்கள் வலிமையாக்கப்படும். தவிர, நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒன்று உருவாக்கப்படும் .

இந்த ஆணையம் அதிகாரம்மிகுந்த அமைப்பாகவும், தவறுசெய்யும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அமைப்பாகவும் இருக்கும். தற்போது 102 வகையான பொருட்களுக்கு பிஐஎஸ் சான்று கட்டாயம்தேவை. இது 1,200 வகையான பொருட்களுக்கு விரிவு படுத்தப்படும். தவறான தகவல்களை தரும் விளம்பரங்களை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது' என்றார்.

Tags:

Leave a Reply