பா.ஜ.க தேசிய இளைஞரணி சார்பில் காஷ்மீர் வெள்ளநிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சியை மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார்.

காஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பா.ஜ.கதேசிய இளைஞரணி சார்பில் இந்தியா முழுவதும் பொதுமக்களிடம் நிதிவசூல் செய்து வழங்கப்பட உள்ளது.

பொதுமக்களிடம் நிதிவசூலிக்கும் நிகழ்ச்சியை தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜ.க அகில இந்திய இளைஞரணி சார்பில் காஷ்மீர்மக்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி இந்தியாமுழுவதும் தொடங்கப்பட்டு உள்ளது.

14-ந்தேதி தமிழகம் முழுவதும் பா.ஜ.க இளைஞரணியினர் நிதிசேகரித்து காஷ்மீருக்கு அனுப்ப உள்ளனர். பொது மக்கள் அனைவரும் அங்குள்ள நம் சகோதரர்களுக்கு உதவவேண்டும்.

வெள்ளையம்மாளை அ.தி.மு.க.வில் சேர்த்திருக்கிறார்கள் என்றசெய்தி வந்துள்ளது. இத்தகைய அரசியல், மிகுந்த மனக் கவலை அளிக்கிறது. வெள்ளையம்மாள் தனது மனுவை வாபஸ்வாங்குவதற்கு அ.தி.மு.க.தான் காரணம் என்று சொன்னோம். இன்று அவர் அதிமுக.வில் சேர்ந்திருப்பது அதை நிரூபிக்கிறது.

ஆனால் ஒருகட்சியின் வேட்பாளர் வாபஸ்பெறப்பட்டு அவரை வேறுகட்சியில் சேர்ப்பது ஜனநாயக முறைப்படி இது எப்படி சரியாக இருக்கும் என்பதையும், இது சரியான நடைமுறைதானா என்பதையும் பொது மக்களின் மனசாட்சிக்கே நான் விட்டு விடுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply