இந்தமா தம் 27ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு தனது உரையை இந்தியில் ஆற்றுவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார் .

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தி தினவிழாவில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ஐ.நா. சபை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முதல்முறையாக இந்தியில் பேசினார். அமைச்சராக நானும் ஐ.நா. கூட்டத்தில் இந்தியில் பேசியுள்ளேன். வரும் 27ம் தேதி நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இந்தியில் தனது உரையை ஆற்றுவார். பல்வேறு வெளிநாட்டு தலைவர்களை சந்திக்கும் போதும் மோடி இந்தியில் பேசுகிறார்.

நாட்டில் 55 சதவீத மக்கள் இந்தியில் பேசுகின்றனர். அதேநேரத்தில் 80 முதல் 90 சதவீத மக்கள், தாய்மொழியாக இல்லாவிட்டாலும் இந்தியை புரிந்து கொள்கின்றனர். இந்தி, நாட்டின் பொதுமொழியாகும். சமஸ்கிருதம் அனைத்து மொழிகளின் தாய், அதேநேரத்தில் இந்தி மற்றும் மற்ற மாநில மொழிகள் சகோதரிகள் என்றார் ராஜ்நாத் சிங்.

Tags:

Leave a Reply