உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் பிரசாரம் செய்துவருகிறார்.

நேற்று கடலூர், விருதாசலம் பகுதியில் பிரசாரம்செய்தார். அவர் கூறியதாவது:–

மோடியின் நல்லாட்சி உள்ளாட்சியிலும் என்ற கோஷத்துடன் இந்ததேர்தலை சந்திக்கிறோம். எங்களின் மன பலத்துக்கும், அ.தி.மு.க.வின் பணபலத்துக்கும் இடையே நடக்கும்தேர்தல்.

தேர்தல் ஆணையம்மீது நம்பிக்கை இல்லாததால் நீதிமன்றம்சென்று இருக்கிறோம். அந்தவழக்கு நாளை (15–ந்தேதி) விசாரணைக்கு வருகிறது.

எங்கள் கூட்டணிகட்சிகள் அனைத்தும் தேர்தலை புறக்கணித்தாலும் எங்களை ஆதரிக்கின்றன. இந்த தேர்தலில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலையை கருத்தில்கொண்டு திமுக., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எங்களை ஆதரிக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளேன்.

எல்லா கட்சிகளின் நிலைப் பாட்டையும் வெளியிடும் கருத்துக்களை பார்க்கும்போது அவர்களின் ஆதரவு ஒருமுகமாகும்.

ஜனநாயகத்தை நிலை நாட்ட எல்லா கட்சியினரும், பொதமக்களும் ஓரணியில் திரளுவார்கள். இந்ததேர்தல் ஒருதிருப்பு முனையாக அமையும்.

நேற்றைய தினம் திருப்பூர், கோவையில் பிரசாரம்செய்தேன். மக்கள் எழுச்சியை நேரில்பார்க்க முடிந்தது. தெரு, தெருவாக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் முகாமிட்டு பணியாற்றுகிறார்கள்.

இந்ததேர்தல் திணிக்கப்பட்டதை போல் வாக்காளர்களும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சுதந்திரமாக மக்கள் ஜனநாயக கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என்றார்

Leave a Reply