சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர்பாலத்தை இடிக்கும்பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .

மத்திய அரசு பதவியேற்று 100 நாள் முடிவடைந்ததை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின்கட்காரி நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்து மதத்தின் முக்கியத்துவம் கருதி, போக்கு வரத்து மற்றும் கட்டமைப்பு துறைகளில் மாற்றுவழிகள் குறித்து ஆலோசிப்பதற்காக ரைட்ஸ் என்ற நிறுவனத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. அதன்படி நாங்கள் சேதுசமுத்திர திட்டத்தை 'ரைட்ஸ்' நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.

இந்ததிட்டம் தொடர்பாக அந்த நிறுவனம் அளித்துள்ள மாற்றுவழிகள் அனைத்தும் பரிசீலனைக்காக மத்திய மந்திரிசபைக்கு ஒருமாத காலத்துக்குள் அனுப்பிவைப்போம். சேதுசமுத்திர திட்டத்துக்காக ராமர் பாலத்தை இடிக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மேலும் தேசிய நீர் வழிகளை மேம்படுத்துவதற்காக 'ஜல் மார்க் யோஜனா' என்ற திட்டத்தை எதிர் காலத்தில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று நிதின் கட்காரி கூறினார்.

Leave a Reply