ஏற்கனவே வங்கிக்கணக்கு வைத்துள்ளவர்களும் ஜன் தன் திட்டத்தின் கீழ் கிடைக்கக் கூடிய பயன்களைப் பெறலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதற்கு ஜன்தன் திட்டத்தின் பயன்களை கேட்டு வங்கியிடம் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களும் விண்ணப்பித்தால் ரூ-பே டெபிட் கார்ட், ஒருலட்ச ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு ஆகியவை அளிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்துக்கு வங்கிக்கணக்கை திருப்திகரமாக கையாண்டால், 5 ஆயிரம் ரூபாய்க்கான முன் பண வசதியையும் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் ஒருவருக்கு, குறிப்பாக பெண் உறுப்பினருக்கு கடன்வசதியை அளிக்குமாறு வங்கிகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply