விமான நிலையங்களில் வி.வி.ஐ.பி.க்கள் இனிமேல் வழக்கமான பந்தாவுடன் செல்லமுடியாது. அவர்கள் வழக்கமான பாதையைவிட்டு சிறப்பு பாதையில் செல்லும் சலுகைளை ரத்துசெய்ய மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விமான நிலையங்களில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட மிகமுக்கிய பிரமுகர்களுக்கு(விவிஐபி) சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவது வழக்கம். விமான நிலையத்திற்குள் அவர்கள் நுழையும் போது ஏராளமான அதிகாரிகள் காத்திருந்து அவர்களை வரவேற்பார்கள். இதனால், பிறபயணிகளுக்கு இடையூறு ஏற்படும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ்கட்சி தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், விமான நிலையங்களில் வி.வி.ஐ.பி.,க்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதால் மற்றபயணிகள் பாதிக்கக் கூடாது என்று விமானநிலைய அதிகாரிகளுக்கும், ஏர்இந்தியா அதிகாரிகளுக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜு உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக, விமான நிலைய அதிகாரிகளுக்கும், ஏர் இந்தியா அதிகாரிகளுக்கும் அசோக் கஜபதி ராஜு ஒருகடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அமைச்சர்கள் உள்பட அரசியல் பிரமுகர்களை வரவேற்பதற்காக ஏராளமானோர் வருவதாலும், அதிகாரிகள் மொத்தமாக கூடி நிற்பதாலும் மற்றபயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வி.வி.ஐ.பி.,க்களையும் மற்றபயணிகளை போலவே நடத்த வேண்டும்.

விமான நிலையத்திற்கு நான் வரும்போது என்னை வரவேற்க ஓரிரு அதிகாரிகள் வந்தால்போதும். அதே போல், விமானத்திற்குள் ஏறச்செல்லும் போது வழக்கமாக பயணிகள் பயன்படுத்தும் விமான நிலைய பஸ்சையே நானும் பயன் படுத்துவேன். விமானம் வரை தனிவாகனம் எனக்கு தேவையில்லை. மற்ற சிறப்பு சலுகைகளும் எனக்கு தேவையில்லை. இதையே மற்ற விஐபிக்களும் பின்பற்றவேண்டும்.அதே நேரத்தில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பு விதி முறைகளில் எந்த மாற்றமும் இருக்ககூடாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், விமான போக்கு வரத்து துறை அமைச்சர் தனக்கு சிறப்புசலுகைகள் தேவையில்லை என உத்தரவிட்டிருப்பதன் மூலம் மற்ற அமைச்சர்களுக்கும் இது பொருந்தும் என்றார்.

Leave a Reply