வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜம்முகாஷ்மீர் மாநிலத்துக்காக வெள்ளநிவாரண பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு, சுங்கக்கட்டணம் ரத்து செய்யப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.

இந்த சுங்கச்சாவடி கட்டண ரத்து செப்டம்பர் 24ம் தேதிவரை அமலில் இருக்கும் என்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் மீட்பு பணிகளின் போது மேலும் சில உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply