திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணி செயலாளர், அம்பத்தூர் தொழிற் பேட்டையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கோவை அருகே வியாழக் கிழமை பிடிபட்டார்.

இது குறித்து, போலீஸார் கூறியது: திருவள்ளூர் மாவட்ட இந்துமுன்னணிச் செயலாளர் சுரேஷ் குமார், கடந்த இரு மாதங்களுக்கு முன், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடலூர் மாவட்டம், பரங்கிப் பேட்டையைச் சேர்ந்த காஜா மொய்தீன் உள்பட 10க்கும் மேற்பட்டோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையில் இந்துமக்கள் கட்சியின் தமிழகத் தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து முன்னணி மாநில பேச்சாளர் மூகாம்பிகை மணி ஆகியோரை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக, கோவையில் என்.எச். சாலை பகுதியில் மானியத் தோட்டத்தை சேர்ந்த என்.சதாம் உசேன் உள்பட 6 பேரை செல்வபுரம் போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த இரு வழக்குகளிலும் தொடர்புடைய மேலும் சிலரை அம்பத்தூர், செல்வபுரம் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், இந்த வழக்குகளில் தொடர்புடைய திருநெல்வேலி மாவட்டம், கூடன் குளத்தைச் சேர்ந்த குட்டி குலான் (எ) சாகுல் (25) என்பவரை அம்பத்தூர் தனிப்படை போலீஸார், கோவை போலீஸார் உதவியுடன் வியாழக்கிழமை மாலை கோவை, பெரியநாயக்கன்பாளையம் என்.ஜி.ஜி.ஓ. காலனி அருகே வைத்துப் பிடித்து, சென்னை கொண்டு சென்றனர்.

Leave a Reply