மார்த்தாண்டம் வெட்டுமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சாரண, சாரணியர் முகாம் நடக்கிறது. இதன் தொடக்கவிழா இன்று நடந்தது. மேலும் முகாமையொட்டி மத்திய அரசின் செயல் திட்டத்தை விளக்கும் ஒன்றுபட்ட இந்தியா, ஒப்பற்ற இந்தியா என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:–

நானும் மாணவ பருவத்தில் சாரணர் இயக்கத்தில் இருந்துள்ளேன். இந்த இயக்கம் மாணவர்களை நல்ல மனிதா பிமானம் உடைய இளைஞர்களாக மாற்றும். சாரணர் இயக்கம் மூலம் நல்ல மாணவர்களை உருவாக்கவேண்டும்.

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு நான் காஷ்மீர்சென்று 2 மாதம் தங்கியிருந்தேன். அப்போது அவர்கள் நம்மை வேற்று ஆட்கள்போன்று பார்த்தனர்.

தற்போது மழையினால் பெரும்சேதம் ஏற்பட்டு நமது மக்கள் அவர்களுக்கு அளித்த ஆதரவு மற்றும் மீட்புபணிகளால் அவர்களிடம் இருந்து நம்மை பிரிக்கமுடியாத அளவுக்கு நம்மோடு ஒன்றிவிட்டனர்.

அதனால் நாம் மாணவர்களுக்கு நல்லகருத்துகளை எடுத்துக் கூறி திறமையான மாணவர்களை நல்ல மனிதாபிமான மாணவர்களை உருவாக்கவேண்டும்.

இந்திய அளவில் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு நாம் ஒருவலுவான இந்தியாவை உருவாக்குவோம் என்று அவர் கூறினார்.

Leave a Reply