நீர் வளங்களை பாதுகாப்பதில் குஜராத் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று மத்திய அமைச்சர் உமா பாரதி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி குஜராத்துக்கு சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டில் உள்ள மாநிலங்களிலேயே குஜராத் தான் நீர் வளத்தை பாதுகாப்பதில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. குஜராத்மாடலை பின்பற்றி நாடுமுழுவதும் உள்ள நீர் வளங்களை பாதுகாக்க அடுத்த ஆண்டு திட்டம் வகுக்கப்பட உள்ளது. குஜராத்தில் நதிகளை பாதுகாத்து அவற்றின்மூலம் இயற்கை வளங்களை பயன் படுத்தி வரும் குஜராத் அரசுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன். 2015-16ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான நீர்வளபாதுகாப்பு திட்டத்தை எனது அமைச்சகம் தொடங்க உள்ளது. அதேபோல், பருவ கால மழை நீரையும் நாம் பாதுகாக்க வேண்டியது அவசியம் ஆகும்.

இதற்கும் குஜராத் வழி காட்டியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.சீன பிரதமர் இங்குவந்திருந்த போது சபர் மதி நதிக்கரையில் சிறிது தூரம் உலவினார். ஆனால் இதுபோல் நம்மால் கங்கை நதிக் கரையில் நடக்க இயலாது. யமுனை நதியும் அதே நிலையில்தான் உள்ளது. இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டுசெல்லும் பிரதமர், கங்கையையும் சுத்தமாக்குவார். அவரது ஆட்சியின்போது குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட நீர்வள ஆதாரபாதுகாப்பு திட்டங்கள், நாட்டிற்கு வழி காட்டியாக அமையும்.இவ்வாறு உமாபாரதி கூறினார்.

Leave a Reply