நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக,வின் பண பலம் வெற்றியை தேடித்தந்துள்ளது. , பாஜக.,வின் , பாஜக.,வினரின் மன பலத்துக்கும் வெற்றி கிட்டியுள்ளது.

எங்கு நோக்கினும் என் கண்களுக்கு எதிரிகளே தட்டுப்படவில்லை என்று கூறிய அம்மா அவர்கள் அடுத்த மறுகணமே ஒரு மாநகராட்சிக்கு 16 அமைச்சர்கள் 25 ந்து எம்.எல்.ஏ .,க்கள் மற்றும் அவர்களது அடிபொடிகள் என்று பெரும் படை பரிவாரத்தையே தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுப்பி. தானும் பிரச்சாரத்தில் குதித்தது அவர்களது மனோ வலிமையை காட்டியது.

எதிரிகளே இல்லாத போர் கலத்துக்கு சிப்பாயே தேவையில்லையே!, ஏன் இத்தனை தளபதிகள்?, ஏன் இத்தனை போராட்டங்கள்? , வியூகங்கள்?, பண பலங்கள் என்று களமிறக்கி போராடினார்கள், தடுமாறினார்கள்.

நெல்லை மாநகராட்சி வேட்பாளர் வெள்ளையம்மாளுக்கு கறுப்புபணத்தையோ!, சிவப்பு பணத்தையோ!! தந்து ஏன் விலை பேசினார்கள்?. விலை போகாத எங்கள் வேட்பாளர்களை எல்லாம் ஆத்திரம் கொண்டு ஏன் மிரட்டினார்கள்?, தாக்கினார்கள்?.

பாஜக.,வுக்கு ஆளும் கட்சி மட்டும் அல்ல தேர்தல் நடத்த வேண்டிய மாநில தேர்தல் ஆணையமும் அல்லவா எதிர்க் கட்சியை போன்று செயல்பட்டது. டென்னிஸ் கோர்டில் நடுவராக இருக்கவேண்டியவர் ஒரு பக்கம் ஆதரவு தந்தால்கூட பரவாயில்லை, பேட்டடை எடுத்துக்கொண்டு ஒருதரப்புக்கு ஆதரவாக விளையாடவே ஆரம்பித்து விட்டால் எண்ண செய்வது?, இருப்பினும் எதிர்த்தரப்பான பாஜக போட்டியிலிருந்து விலகாமல் இருதரப்புக்கும் பலத்த பதிலடிதந்து மான வலிமையுடன் தடுமாறச் செய்ததே இதுவே பாரதிய ஜனதாவுக்கு, அதற்கு தலைமை தாங்கிய எங்கள் அம்மா தமிழிசைக்கு , போராடிய தொண்டர்களின் மனோவலிமைக்கு கிட்டிய வெற்றி.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply