விவசாயிகள் மூலம் ஒருகோடி லிட்டர் எத்தனால் கிடைக்கிறது. இதன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் எண்ணெய் இறக்குமதிக்கு ஆகும்செலவை குறைக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடந்த ஒருநிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி இது குறித்து பேசுகையில், ''நம்முடைய விவசாயிகளால் பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்யமுடியும். இந்த வருடம் விவசாயிகள் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியத்திற்கு ஒருகோடி லிட்டர் எத்தனால் கொடுத்திருக்கிறார்கள் என்றால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள்.

கண்டுபிடிப் பாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோர் தான் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்கின்றனர். 6 லட்சம்கோடி அளவில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யால் இந்திய பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப் படுகிறது. ஒருலட்சம் கோடி அளவுக்கு இறக்குமதியை குறைத்தால்கூட, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

மிகப் பெரிய கரும்பு தொழிலில் இருந்து பசுமை எரி பொருள் தயாரித்தால் உத்தர பிரதேச மாநில விவசாயிகளின் தலை எழுத்தை மாற்றமுடியும்'' என்றார்.

Leave a Reply