இனி ஒரு விதி செய்வோம்….புதியதோர் உலகம் செய்வோம்..என்ற பாரதியின் கூற்று மெய்யாகும் காலம் மிக அருகில்தான் இருக்கிறது என்று மங்களகரமாக உறுதி செய்துள்ளது மங்கல்யானின் முதல் முயற்சி முழு வெற்றி.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 2013, நவம்பர் 5-ஆம் தேதி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள், 2013 டிசம்பர் 1 வரை பூமியின் சுற்றுப்பாதையில் நிலைக்கொண்டிருந்தது பிறகு பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டடு தனியாக வினாடிக்கு, 22.1 கி.மீ., வேகத்தில் செவ்வாயை நோக்கி கடந்த பத்து மாதமாக பயணித்தது.

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட மங்கல்யானின் செவ்வாய் கிரகத்தை நோக்கிய பயணம் மற்றும் சுற்றுவட்டப் பாதை அருகில் செல்வதற்கான முக்கிய உத்தரவுகள் உள்ளிட்டவை விண்கலத்தின் உள்ளேயே உள்ள கணினியில் மிக துல்லியமான கட்டளைகளாக வடிவமைக்கப்பட்டு ஏற்றப்பட்டிருந்தது. அந்த உத்தரவுகளின் படி அந்த செயற்கைக்கோள், செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் கொண்டுசெல்லுமாறு வடிவமைக்கப்பட்டிருந்தது.
செயற்கைக்கோள், வினாடிக்கு, 22.1 கி.மீ., வேகத்தில் செவ்வாயை நோக்கி கடந்த பத்து மாதமாக பயணித்தது. அதே நேரத்தில் செவ்வாய் கிரக சுற்றுப்பாதைக்குள் நுழைந்த பிறகு அதன் வேகத்தை நோடிக்கு 5 கி.மீ.,க்கு கீழே குறைத்தாக வேண்டும். வெற்றிகரமாக 65 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்தது ஒரு சாதனை என்றால், வேகத்தை கட்டுப்படுத்தி சுற்றுப் பாதைக்குள் நிலைநிறுத்துவது அதைவிட பெரும் சவாலாகவே கருதப்பட்டது. இல்லாவிடில் மங்கல்யான் செவ்வாயை கடந்து சூரியனை நோக்கி சென்றுவிடும்.

அதன் வேகத்தை குறைப்பதற்காக லாம் என்ற என்ஜினும் , அதனுடன் 8 சிறிய என்ஜின்களும் பொருத்தப் பட்டிருந்தன. இருப்பினும் கடந்த பத்து மாதங்களாக உறங்கி கொண்டிருந்த இந்த வேக குறைப்பு இன்ஜினை ஒரு நான்கு நிமிடங்களுக்குள் எரியூட்டி உயிர்பிப்பது என்பது படபடப்பு நிறைந்த நிமிடங்களாகவே காணப்பட்டது.

சரியாக காலை 7.17 மணிக்கு இன்ஜினை எரியூட்டி இயக்குவதற்கான கட்டளைகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த சமயத்தில், மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் மறுபக்கத்திற்கு சென்றுவிட்டது.

அதுபோன்ற சமயங்களில் பூமியிலிருந்து விண்கலத்தை தொடர்புகொள்ள முடியாது. எனவே, தாங்கள் ஏற்கனவே அனுப்பிய கட்டளைப்படி விண்கலத்தில் உள்ள கருவி திட்டமிட்டபடி காலை 7.17 மணிக்கு இயங்கியதா என்பதை விஞ்ஞானிகளால் உடனடியாக தெரிந்து கொள்ள முடியவில்லை.

இதனால், ஆய்வுக்கூடத்தில் இருந்த பிரதமர் உள்பட அனைவரும் மிகவும் பதற்றத்துடனே காணப்பட்டனர். எட்டு மணிக்கெல்லாம் மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தின் மறு பகுதியில் இருந்து வெளியேறியது, 8.12 க்கு எல்லாம் நினைத்த படி வேகம் குறைக்கப்பட்டது. செவ்வாயின் சுற்றுப் பாதையில் மங்கல்யான் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது என்ற செய்தி கிடைத்தது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடும் முயற்சிக்கு வெற்றிக் கிட்டியது

ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே இதுவரை செவ்வாய்க்கு செயற்க்கைகோளை அனுப்பியுள்ளன. இந்த வரிசையில் இந்தியா புதிதாக இணைந்துள்ளது. இருப்பினும் இந்தியா மட்டுமே தனது முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்தியா இந்த விஷயத்தில் ஜப்பானையும் , சீனா.,வையும் பின்னுக்கு தள்ளியுள்ளது.

1998–ம் ஆண்டு ஜப்பான் அனுப்பிய விண்கலம், எரிபொருள் பற்றாக்குறையால் பாதிவழியிலேயே வானவெளியில் கட்டுப்பாடு இன்றி சென்று காணாமல் போனது. 2011–ம் ஆண்டு சீனா அனுப்பிய விண்கலம், பாதி வழியிலேயே தனது பயணத்தை முடித்துகொண்டது . உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 51 முயற்சிகளில் 21 முயற்சிகளுக்கு மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. .

அமெரிக்கா செவ்வாய்க்கு கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 128 கோடி ரூபாய் செலவழித்து செயற்க்கைகோளை அனுப்புகிறது என்றால் , இந்திய விஞ்ஞானிகள் வெறும் 450 கோடி ரூபாய் செலவிலேயே அனுப்பிவிட்டனர் உலகின் உச்ச தொழில்நுட்பத்தை மிகக்குறைந்த விலையில் தயாரித்து உலகை நம்பக்கம் திரும்பிபார்க்க வைத்துள்ளனர்.

மங்கள்யானில், ஐந்து முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மீத்தேன் அல்லது சதுப்பு நில வாயு இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கான சென்சார் கருவி, உயிர் வாழ்வதற்கான அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை ஆராயும் கருவி, அந்த கிரகத்தின் உஷ்ண நிலையை கண்டறியும், 'ஸ்பெக்ட்ரோ மீட்டர்', வண்ண கேமரா, அதன் இயற்கை வளங்கள் பற்றி ஆராயும் கருவி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இவை செவ்வாய் கிரகத்திலிருந்து குறைந்தபட்சம் 421 கிலோமீட்டர் தொலைவும், அதிகபட்சம் 76,993 கிலோமீட்டர் தொலைவும் கொண்ட நீள்வட்டப் பாதையில் ஆறு மதத்துக்கு 60 வது முறை சுற்றி ஆராய்ச்சி செய்யும்.

செவ்வாய் கிரகத்தின் பிசிக்கல் அம்சங்கள்.. தோற்றம், மேற்பரப்பு, வளி மண்டலம், மணற்பரப்பு, தாது வளம், செவ்வாய் கிரகத்தில் ஒருகாலத்தில் இருந்த ஆறுகள் பின்னர் என்னவாயின, அதில் ஓடிய தண்ணீர் என்ன ஆனது, தரைக்குள் போய்விட்டதா, ஆவியாகிவிட்டதா, ஒரு வேளை ஆவியாகியிருந்தால் ஏன் ஆவியானது?. ஆறுகள் இருந்திருந்தால் கண்டிப்பாக ஆக்ஸிஜனும் செவ்வாய் கிரகத்தின் வளி மண்டலத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் ஆக்சிஜன் இல்லை. ஆக்ஸிஜன் ஏன் அதன் வளி மண்டலத்தை விட்டு முழுமையாக வெளியேறியது… இப்படியான சிக்கலான கேள்விக்கான முடிச்சியைத்தான் மங்கல்யான் அவிழ்க்க பொகிறது .

வளரும் குழந்தைக்கு எப்படி கல்வி முக்கியமோ, அதேபோன்று வளரும் தேசத்துக்கு தொழில்நுட்பப வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம். ஆனால் சில ஆறறிவு படைத்த அரையறிவு அறிவு ஜீவிகள் எல்லாம் இந்த 450 கோடியை வைத்து கக்குஷ் கட்டலாம், ரோடு போடலாம் இப்படி செவ்வாயில் கொண்டுபோய் கொட்டுகிறார்களே என்று வெறும் வாயில் அவல் அரைக்கிறார்கள். இப்படி அரைத்து அரைத்துதான் நாம் கால்காசுக்கு பொறாத தொழில்நுட்பத்தை எல்லாம் பல ஆயிரம் கோடி கொடுத்து வாங்கி கொண்டிருக்கிறோம். 5ந்து கோடி பொறாத பீரங்கிகள் 50 பது கோடி, 30 பது கோடி பொறாத விமானங்கள் 360 வது கோடி. 5௦௦௦யிரம் கோடி பொறாத அணுசக்தி உபகரணங்கள் எல்லாம் நாற்பதாயிரம் கோடி என்று நாம் அந்நிய தேசத்துக்கு கொட்டி கொடுத்துவிட்டோம். எத்தனை கோடி கோடி ஏக்கரில் விவசாயம் செய்தாலும் இந்த அளவு தொகையை நம்மால் ஈடுகட்ட முடியாது. எனவே அனைத்துடன் சேர்ந்த அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது மிகவும் இன்றியமையாதது. இன்று நம் தேசம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றுவிட்டது

அன்று பொக்ரான் வெற்றி செய்தியோடு வாஜ்பாய் கம்பிரமாக அமெரிக்கா சென்றார். இன்று மோடி மங்கல்யான் வெற்றி செய்தியோடு கம்பிரமாக அமெரிக்கா செல்கிறார். என்பது இங்கே கூடுதல் தகவல்.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply