இந்திய பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்காவில் அந்நாடுவாழ் இந்தியரும் முதலாவது இந்து எம்பி.யுமான துளசிகப்பர்ட்டை சந்தித்து பேச உள்ளார்.

அமெரிக்க ஹவாய் தீவைச்சேர்ந்த துளசி கப்பர்ட், குடியரசு கட்சியை சேர்ந்த எம்.பி.யாவார். இவர் எம்.பி.யாக பதவி ஏற்கும்போது பகவத் கீதையின் பெயரில் சத்தியபிரமாணம் செய்து கொண்டவர்.

இவர் 2002ம் ஆண்டு குஜராத் வன் முறைகளைக் காரணம் காட்டி மோடிக்கு அமெரிக்கா விசாமறுத்து வந்ததை தொடர்ந்து கடுமையாக அவர் எதிர்த்துவந்தார்.

மோடியை அமெரிக்காவுக்கு அழைப்பதில் மிகமுனைப்புடன் செயல்பட்டவர். நாட்டின் பிரதமராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர் களுடன் சந்திப்பை மேற்கொள்கிறார். மோடி சந்திக்க உள்ள முக்கிய நபர்களில் ஒருவராக துளசி கப்பர்ட்டும் இடம் பிடித்துள்ளார்.

Leave a Reply