5 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி 2001 செப்டம்பர் 11-ம் தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய அமெரிக்காவின் இரட்டைகோபுரம் இருந்த இடத்தில் அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.

அமெரிக்காவுக்கான இந்தியதூதர் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகளுடன் அல் கொய்தா தாக்குதல் நடத்திய சம்பவத்தை நினைவு படுத்தும் விதத்தில் பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

பிறகு, வெள்ளை குர்தா, சுரிதார் உடை மற்றும் கரு நீல வண்ணத்தில் ஷாலுடன் காட்சியளித்த மோடி இரட்டை கோபுர தாக்குதலில் உயிர்களை தியாகம் செய்தவர்களின் கிரானைட் கல் வெட்டுகளின் முன் நின்று சிறிதுநேரம் ஆழ்ந்த அஞ்சலி செலுத்தினார்.

2001-ல் நடந்த இரட்டை கோபுரதாக்குதலில் இந்தியர்கள் உட்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply