பாகிஸ்தானுடன் பேச்சுநடத்த, இந்தியா தயாராக இருக்கிறது . ஆனால், பயங்கர வாதத்தின் நிழலில் , அந்த நாட்டுடன் பேச்சு நடத்த முடியாது,'' என்று , பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.,வில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

அவர் பேசியதாவது:இந்தியாவின் பிரதமராக, ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் உரை நிகழ்த்துவதில் பெருமைப் படுகிறேன். உலக நாடுகளில் நீதியும், அமைதியும், வளமும் நிலவ, இந்தியாவிரும்புகிறது. உலகம் முழுவதும் ஒரு குடும்பம்தான். அதிலுள்ள பன்முக தன்மையை இந்தியா நன்கு அறிந்துள்ளது. இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களின் பிரதிநிதியாக இங்குபேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன். உலக அரங்கில் இந்தியாவின் மீதான எதிர் பார்ப்பு அதிகமாக உள்ளது. அதை, நாங்கள் நன்கு அறிவோம்.

இந்தியா, அண்டை நாடுகளுடன் சிறப்பான உறவை பேணிவருகிறது.பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயாராகவுள்ளது. ஆனால், பயங்கரவாத பின்னணியை அந்தநாடு கைவிட்டு, அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவேண்டும்.காஷ்மீர் பிரச்னை இருநாடுகளுக்கு இடையில் பேசிதீர்க்கப்பட வேண்டியது. அதை, ஐ.நா.,வில் எழுப்புவது தவறானது. சிறிய நாடு, பெரியநாடு என்ற பாரபட்சம் இல்லாமல், அனைத்து நாடுகளுக்கும், பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது.

எனவே, பயங்கர வாதத்தை வேரறுக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வான்வழியாக மட்டுமல்லாமல், கடல் வழியாகவும், சைபர் கிரைம் மூலமாகவும், பயங்கரவாதம், மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது . ஐ.நா., என்ற அமைப்பு செயல்பட்டுவரும் நிலையில், பல நாடுகள், தங்களுக்குள், தனியாக சில அமைப்புகளை ஏற்படுத்துவது ஏன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

நமக்குள்ள கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பயங்கரவாதத்தை ஒழிக்க, ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க, சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்.வர்த்தகம் தொடர்பான விஷயங்களில், சர்வதேச அளவிலான ஒப்பந்தம் மேற்கொள்வது போல், மற்ற விஷயங்களிலும் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.ஒருநாடு, மற்ற அனைத்து நாடுகளுக்கும் உத்தரவிட முடியாது. இதில், ஒருங்கிணைந்த செயல்பாடுகள் தேவை.சர்வதேச யோகாதினத்தை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும். ஒருநாட்டின் தலை விதி, அண்டை நாடுகளுடன் தொடர்புடையது. அதனால்தான், அண்டை நாடுகளுடன், நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கு, இந்தியா முன்னுரிமை அளிக்கிறது.இந்தியா, வளரும் நாடாக இருந்தாலும், எங்களிடம் உள்ள வளங்களை, எந்தெந்த நாடுகளுக்கு தேவைப் படுகிறதோ, அந்த நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக உள்ளோம்..இவ்வாறு, மோடி பேசினா

Leave a Reply