தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை தடுத்து தேசத்தை காப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மாதா அமிர்தானந்த மயியின் 61வது பிறந்த நாள்விழா கேரள மாநிலம் கொல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது:

தீவிரவாதம், பிரிவினைவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நாடு எதிர் கொண்டுள்ளது. ஆனால் அவற்றை தடுப்பதில் மத்தியஅரசு திறம்பட செயல்பட்டு தேசத்தை காப்பாற்றும்.

நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எதிர்கொள்ள மாதா அமிர்தானந்த மயி போன்ற ஆன்மிக தலைவர்களின் ஆசி அவசியம். பொருளாதார வளர்ச்சியில் மட்டுமன்றி ஆன்மிகத்திலும் இந்தியா வல்லரசாகி கொண்டிருக்கிறது.

உலகம் ஒரேகுடும்பம் என்று நமது ஆன்மிகத் தலைவர்கள் கூறியுள்ளனர். அந்தவகையில் உலகை வழிநடத்தும் ஆன்மிக சக்தியாக இந்தியா உருவாகும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply