மகாராஷ்டிராவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம்செய்ய லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.) முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் அடுத்தமாதம் 15-ம்தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தொகுதிபங்கீடு தொடர்பாக உடன்பாடு ஏற்படாததால், பாஜக சிவசேனா கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி முறிந்துவிட்டது. இந்நிலையில், பாஜக வுக்கு ஆதரவாக லோக் ஜன சக்தி பிரச்சாரம் செய்ய முடிவுசெய்துள்ளது. லோக் ஜன சக்தியின் தலைவரும், மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார்..

ராம் விலாஸின் மகன் சிராக் பாஸ்வான் தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய ஆட்சிமன்றக் குழுகூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஹரியாணா மாநிலத்திலும் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக செயல்படுவது என லோக்ஜனசக்தி கட்சி முடிவு செய்துள்ளது.

Leave a Reply