ஐ.நா. பொதுக்கூட்டத்தில் தமது நாட்டின் பிரதமர் நவாஸ்ஷெரீப் பேச்சில் இல்லாத அனைத்து அம்சங்களும் இந்தியப் பிரதமர் மோடியின் பேச்சில் இருந்ததாக பாகிஸ்தான் பத்திரிகை மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையான 'டெய்லி டைம்ஸ்' திங்கள் கிழமை 'ஐ.நா.-வில் மோடி' என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை காட்டிலும், இந்திய பிரதமர் மோடி அனைத்து வகையிலும் ஐ.நா. கூட்டத்தில் பேசி, அனைவரையும் வசீகரித்தார் அவரது பேச்சில் தனது நாட்டின் பண்டைய கலாச்சாரத்தை கேட்போருக்கு உண்ர்த்தும்விதமாக பேசினார். அமெரிக்க மக்களும் இந்தியக் கலாச்சாரத்தை புரிந்துகொள்ளும் விதத்தில் பேசினார்.

ஆனால், ஷெரீப் மிகவும் குறுகிய மனப் பான்மை உடையவராக தோற்ற மளித்தார். நரேந்திர மோடி பெற்றிருந்த அனைத்தும் ஷெரீபிடம் காண முடிய வில்லை என்பதை பாகிஸ்தான் மக்களே உணர்ந்தனர்.

முக்கியத்துவத்தை தாண்டி, பாகிஸ்தான் குறித்து மோடி பெரிதாக பேச வில்லை. அவரது பேச்சில், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சிகள், சில கொள்கைகளை சாதிக்கும் நோக்கத்துடன் பயங்கர வாதத்துக்கு பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பதாகவும் குற்றம்சாட்டி பேசினார். பயங்கரவாதத்துக்கு அளிக்கும் ஆதரவால், பாகிஸ்தான் பல வற்றை இழந்ததையும் அவர் குறிப்பிட்டார்.

இதனைத் தவிர, முழுக்கமுழுக்க இந்தியாவின் மக்கள்தொகை, அதனால் இருக்கும் பலன்கள், உலகளவில் இந்தியாவின் முக்கியத்துவம், பருவநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு என பல விஷயங்களில் அவரது பேச்சில் பொதுப்படைத்தன்மை இருந்தது.

மேலும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தனதுபேச்சில் அனைத்து நாடுகளையும் வசீகரிக்கவில்லை , பாகிஸ்தானின் முக்கியத்துவங்களை அவர் குறிப்பிட தவறிவிட்டார் என்று அந்நாட்டுப் பத்திரிகை மறைமுகமாக சாடியுள்ளது.

Leave a Reply