இந்தியாவில், தீவிரவாததை வளர்ப்பதும் இல்லை.,அதை ஏற்றுமதிசெய்வதும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். 4-வது நாளான நேற்று வெளிநாட்டுகுழு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பயங்கர வாதத்தால் வரக்கூடிய சவால்கள் அதிகரித்துள்ளது. தீவிரவாதம் நல்லது மற்றும் கெட்டது என்று எந்தவடிவில் வந்தாலும் அதை நிராகரிக்க வேண்டும்.உலக சவால்களுக்காக திறம்பட செயல்படவேண்டும். என்று கூறினார்

மேற்கு ஆசியாவில் எழுச்சிபெற்று வரும் ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் பரவும் ஆபத்து உள்ளதா என்ற கேள்விக்கு. பிரதமர் மறுப்புதெரிவித்தார். இந்தியாவில் தீவிரவாததை வளர்ப்பதும் இல்லை. ஏற்றுமதி செய்வதும் இல்லை என கூறினார்.

அல்- கொய்தா அச்சுறுத்தல் குறித்த சி.என்.என் கேள்வி ஒன்றுக்கு இந்திய முஸ்லீம்களிடம் அல்கொய்தா தோல்வி அடைந்துள்ளதாக பதில்அளித்து உள்ளதாக பிரதமர் கூறினார்.

இந்தியாவில் உள்ள அனைத்து சமூகங்களும் ஒருமைய தத்துவத்தலேயே இயககப் படுகின்றனர்.அது புத்தர் , மகாத்மாகாந்தி மூலமாக சித்தரிக்கப்டுகிறது. அகிம்சை எங்கள் தத்துவத்தின் மையமாக உள்ளது.

தீவிரவாதத்திற்கு எல்லை இல்லை. தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம் கெட்டதீவிரவாதம் என்று இல்லை. தீவிரவாதததை ஒருதீவிர சவாலாக எடுத்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது. பலநாடுகள் வருத்தமடைகின்றன மனித தன்மைக்கு எதிரான தீவிரவாத்தின் அசிங்கமான முகத்தை முன்பே அறிந்துகொள்ள முடியவில்லையே என்று.

அரசியலில் பிளஸ்மைனஸ் என்பதை அளவிட முடியாது. தீவிரவாததிற்கு எதிராக உலகம்முழுவதும் குரல்கொடுக்க வேண்டும்.

மனிதனின் தலை எடுக்கம் காட்சியை காட்டி யாரையும் 21வது நூற்றாண்டில் பயமுறித்திவிட முடியாது தீவிரவாதம் மனித இனத்திற்கு எதிரானது.என்று அவர் கூறினார்

Leave a Reply