மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ராஜ் காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நம் நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 145-வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தி பிறந்த நாளான இன்று நரேந்திரமோடி இன்று தூய்மை இந்தியா என்ற இயக்கத்தை நாடுமுழுவதும் தொடங்கி வைத்தார்.

இன்று காலை பிரதமர் நரேந்திரமோடி, ராஜ் காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு காலை 7.30 மணிக்கு சென்றார். அங்கு காந்தி நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் சிறிதுநேரம் அங்கே அமர்ந்து பின்னர் சென்றார். லால்பகதூர் சாஸ்தரியின் பிறந்த நாளும் இன்றும் என்பதால் அவருக்கும் மரியாதை செலுத்தினார்.

Tags:

Leave a Reply