சட்ட சபைத் தேர்தலில், நீண்ட கால கூட்டணி நண்பனான சிவசேனா இல்லாமல், முதன் முறையாக, தனக்கென ஓட்டுகேட்டு பிரசாரம் தொடங்கியுள்ளது பா.ஜ.க, இதற்காக, பிரதமரான பிறகு, முதன் முறையாக அம்மாநிலத்திற்கு செல்லும் நரேந்திர மோடி, மும்பையில் மட்டும், மூன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசவுள்ளார்.

மோடி யின் தேர்தல்பிரசார சுற்றுப் பயண திட்டம் வகுக்கப்பட்டு, ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்து, நாடு திரும்பியுள்ள பிரதமர் மோடி, வரும் சனிக் கிழமை, மும்பை செல்ல உள்ளார். அங்கு 15 இடங்களில் பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மும்பையில் நிறைய தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சியே, ஆட்சியை பிடிக்கும் என்ற, 'சென்டிமென்டும்' உள்ளது. கடந்ததேர்தலில், மாநிலம் முழுவதும் 82 தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றிபெற்று இருந்தாலும், மும்பையில் மட்டும், 17 தொகுதிகளை, கைப்பற்றி இருந்தது. எனவே, மும்பையில் உள்ள அத்தனை தொகுதிகளையும், வென்றுகாட்ட வேண்டுமென்று, பாஜக., மேலிடம், அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply