மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப் பெரிய ஜோக்கர் ராஜ் தாக்கரே தான் என தெரிவித்துள்ளார் இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அதவாலே. மகாராஷ்டிர மாநில சட்ட சபைத் தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளரை ஆதரித்து இந்திய குடியரசு கட்சித்தலைவர் ராம்தாஸ் அதவாலே நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார்.

துணை முதல்வர் பதவி தருவதாக கூறி மகாராஷ்டிரா நவ நிர்மாண் தலைவர் ராஜ்தாக்கரே தன்னை வைத்து காமெடிசெய்து வருகிறார். மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரே தான் மிகப்பெரிய ஜோக்கர் . மகாராஷ்டிராவில் முதல்வராக ராஜ் தேர்ந்தெடுக்கப் பட்டால், மாநிலம் தீப்பற்றி எரியும் , அப்போது நான்தான் தண்ணீரை கொண்டுவந்து அதை அணைப்பேன் என்று ராம்தாஸ் கூறினார்.

தங்கள் கட்சி இத்தேர்தலில் பாஜக.,வுடன் கூட்டணி அமைத்திருப்பது குறித்து உத்தவ்தாக்கரேயின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்த ராம்தாஸ், 'தனக்கு துணைமுதல்வர் பதவி தருவதாக சேனா கூறியது,. ஆனால் பாஜக.கூட்டணியைவிட்டு சென்ற பிறகு இவர்கள் எப்படி ஆட்சியை பிடிப்பார்கள் என்பதே எனது கேள்வி எனக்கூறி பிரச்சாரம் மேற்கொண்டார்.

Leave a Reply