சுத்தமான இந்தியா என்ற திட்டத்தை நேற்று பிரதமர் நரேந்திரமோடி, தொடங்கி வைத்தார். மேலும், சுத்தமான இந்தியா உருவாக்க பொதுஇடங்களில் பணியாற்ற, 9 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மிருதுளா சின்காஜி, சச்சின் தெண்டுல்கர், பாபா ராம் தேவ், கமல் ஹாசன், சசிதரூர், பிரியங்கா சோப்ரா, சல்மான்கான், அனில் அம்பானி ஆகியோர்தான் இந்த 9 பேர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் இந்தசவாலை பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா ஏற்றுக் கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்ததிட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா தனது டூவிட்டர் இணைய தளத்தில் நான் தாழ்மையுடன் மரியாதைக்குரிய பிரதமர் நரேந்திர மோடிஜியின் சவாலை ஏற்றுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply