இந்தியர்கள் அபார திறமைசாலிகள் . அவர்கள் தங்கள் திறமைகளை அடையாளம்கண்டு, அவற்றை தேச வளர்ச்சிக்காக பயன் படுத்த வேண்டும்" என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆல் இந்தியா ரேடியோ பன்பலையில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். 15 நிமிடங்கள் அவரது உரைநீடித்தது. அப்போது அவர் தேசத்தின் வளர்ச்சியில் அனைத்து மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பிரதமர் மோடி பேசியதாவது: "செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலத்தை மிகக்குறைந்த செலவில் நமது விஞ்ஞானிகள் அனுப்பியுள்ளனர். நமது நாட்டில் திறமைகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், நமக்குள் மறைந் திருக்கும் திறமைகளை நாம் மறந்து விட்டோம். அதுதான் நமது பிரச்சினை.

என் சகோதர, சகோதரிகளே இந்நிலை நீடிக்கக் கூடாது. நமது திறமைகளை நாம் அங்கீரிக்கவேண்டும். சுவாமி விவேகானந்தா ஒருகதை சொல்லியிருக்கிறார். அதில் சிங்கத்தால் வளர்க்கப்பட்ட ஒரு ஆட்டுக் குட்டி தனது பலத்தை உணர்வதை அழகாக எடுத்துரைத்திருப்பார். நம் திறமைகளை உணர்ந்து, சுயமரியாதையுடன் வாழ கற்றுக் கொண்டால் நாம் வெற்றிபெறலாம் .

காதி தயாரிப்பை வாங்கவேண்டும் என்பதை மக்கள் வழக்கப்படுத்தி கொள்ளவேண்டும். அதனால், ஏழைகளுக்கு நன்மை கிடைக்கும்.

நாட்டுமக்களுடன் இனி அவ்வப்போது வானொலியில் பேச இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 11 மணியளவில் உரை நிகழ்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply