தலைநகர் டில்லியில் நேற்று நடந்த தசராவிழாவில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் , தலைவர் சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் , ஒரே மேடையில் அமர்ந்து கண்டு களித்தனர். .

கடந்த, 10 நாட்களாக நடந்த தசராவிழாவின் கடைசி நாளான நேற்று, ராவணனை வதம்செய்யும் நிகழ்ச்சி, டில்லி சுபாஷ் மைதானத்தில் நடந்தது. இந்தவிழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, சோனியா காந்தி , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர், முன்னதாக வந்து பல்வேறு விஷயங்கள் குறித்து, சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தார். பின், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஆகியோர் வந்ததும், மோடி, சோனியா உள்ளிட்டோர் அவர்களை வரவேற்று, மைதானத்துக்குள் அழைத்துச் சென்றனர். விழாவை துவக்கிவைக்கும் வகையில், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் மோடி, சோனியா உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றினர். பின், ராமர், லட்சுமணன் வேடம் அணிந்திருந்த வர்களுக்கு திலகமிட்டனர். இதையடுத்து, மோடி, சோனியா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும், ஒரேமேடையில் அமர்ந்தனர்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விழாவை துவக்கிவைத்தார். இதன் பின், ராவணன், கும்பகர்ணன் ஆகியோரை வதம்செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்த இருவரின் உருவ பொம்மைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. அப்போது, மைதானத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.

Leave a Reply