மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்குகிறார் .

ஹரியானாவின் கர்னல்மாவட்டத்தில் இன்று பிரச்சாரத்தை தொடங்கும் மோடி, பின்னர் மகாராஷ்டிராவின் பீட்தொகுதிக்கு சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். மகாராஷ்டிராவில் பத்திற்கும் மேற்பட்ட பேரணிகளிலும் பொதுக்கூட்டங்களிலும் மோடி கலந்துகொள்கிறார். சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக.,வின் முக்கிய தலைவர்கள் இருமாநிலங்களிலும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 25 ஆண்டுகளுக்குபிறகு பாஜ.,கட்சியும் சிவசேனாவும் தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுகின்றன. ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் வரும் 15ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 19-ம்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

Leave a Reply