பிரதமர் நரேந்திரமோடி பயணம் செய்யவிருந்த மாற்று விமானத்தில் செயலிழக்கப்பட்ட கையெறிகுண்டு கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திர மோடி அமெரிக்கா சென்ற போது பயன்படுத்தப்பட்ட ஜம்போஜெட் விமானத்திற்கு மாற்றாக ஏர் இந்தியா விமானம் ஒன்று தயாராக இருந்தது.

அவர் நாடு திரும்பியபிறகு அந்த விமானம் வர்த்தக ரீதியான பயன் பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ஐதராபாத் வழியாக இந்தவிமானம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்குச் சென்றடைந்தது.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது பயணிகளின் இருக்கைக்குக் கீழே செயலிழந்த நிலையில் கையெறிகுண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நரேந்திர மோடியின் பயணத்திற்கு பயன்படுத்தபட இருந்த விமானத்தில் கையெறிகுண்டு இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply