ஜிகாதிகளுக்குப் பாதுகாப்பான இடமாக மேற்குவங்க மாநிலம் மாறி உள்ளது என்று பாஜக குற்றம் சுமத்தியுள்ளது .

மேற்குவங்க மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிப்பணியாளர் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 2ம் தேதி அவரது வீட்டில் வெடி குண்டு வெடித்து இரண்டு தீவிரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்தைத்தொடர்ந்து அங்கு வெடிகுண்டுகள், கைப்பேசிகள் மற்றும் ஜிகாதிபிரசுரங்கள் ஆகியவை அம்மாநில காவல்துறையால் கைப்பற்றப்பட்டன. எனினும், அவற்றை தேசியபுலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல், அவை அழிக்கப்பட்டு விட்டன.

மேற்குவங்க மாநில அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து பா.ஜ.க.வின் செயலர் சித்தார்த் நாத்சிங், "சாட்சியங்களை அழித்து விட்டு அந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாள் தான் தேசிய புலனாய்வு முகமைக்குத் தகவல்தரப்பட்டது. அது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், சம்பவம் நடந்த அந்தவீடு திரிணமூல் காங்கிரஸ் கட்சி பணியாளரின் வீடுதானா என்பதை மம்தா பானர்ஜி அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply