சோனியா காந்தி மருமகன் ராபர்ட்வத்ரா மற்றும் டிஎல்எப் நிறுவனங்கள் நடுவேயான நிலவர்த்தகத்தை அவசர கதியில் ஹரியானா அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது என்ற பகீர்குற்றச்சாட்டை முன்வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தார்.

ஹரியானா மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் ஹிசார் பகுதியில் இன்று பாஜகவுக்கு ஆதரவுதிரட்டி, மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், "புபிந்தர்சிங் ஹூடா தலைமையிலான ஹரியானா அரசு, ராபர்ட் வத்ராவுக்கு உடந்தையாக செயல் படுகிறது. டிஎல்எப் நிறுவனத்துடனான வத்ராவின் டீலிங்குகளுக்கு அவசரகதியில் ஹரியானா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏனெனில், தேர்தல்முடிந்து ஹரியானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், சட்டவிரோத டீலிங்குகளுக்கு அனுமதி கிடைக்காது என்று ஹூடா அரசுக்கு நன்கு தெரிந்துள்ளது. எனவே தான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஹூடா அரசு இது போன்ற முடிவை எடுத்துள்ளது. காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடமிருந்து முதல்வர் ஹூடாவுக்கு வந்த நெருக்கடிகளால் அவர் இம்முடிவை எடுத்திருப்பார் என்று கருதுகிறேன்.

இது குறித்து தேர்தல் ஆணையம் உரியகவனம் செலுத்த வேண்டும். தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறியதற்காக ஹரியானா முதல்வர் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். ஹரியானாவின் ஹூடா தலைமையிலான அரசும், காங்கிரஸ் கட்சியும், தங்களது தோல்வியை முன் கூட்டியே ஒப்புக்கொண்டு விட்டதை, இந்த வெட்கங்கெட்டசெயல் உறுதிப்படுத்தி விட்டது. இவ்வாறு மோடி பேசினார்.

Tags:

Leave a Reply